ஓரினசேர்கையாளர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றுக்கொள்ள அனுமதி..!
இஸ்ரேல் நாட்டில் வாடகைத்தாய் மூலமாக குழந்தையை பெற்றுக்கொள்ளும் சட்டம் கடந்த வருடம் அமலானது. இந்த சட்டத்தின் படி, தன்பாலின தம்பதிகள் மற்றும் தனியாக உள்ள ஆண்கள் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த விசயத்திற்கு கண்டனம் தெரிவித்த ஓரின சேர்க்கையாளர்கள் உரிமை ஆர்வலர்கள், அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், தன்பாலின ஈர்ப்பு தம்பதிகள் மற்றும் தனியாக உள்ள ஆண்கள் வாடகைத்தாய் மூலமாக குழந்தையை பெற்றுக்கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கியது.
மேலும், இந்த தீர்ப்பின் அடிப்படையில் கட்டுப்பாடுகளை தளர்த்தவும் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அரசு ஒருபாலின ஈர்ப்பு தம்பதிகள் மற்றும் தனியாக உள்ள ஆண்கள் வாடகைத்தாய் மூலமாக குழந்தையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது.