மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜப்பானை புரட்டிப்போட்ட நான்மடோல் புயல்.. 2 பேர் பலி., 100 பேர் காயம்.. மின்சாரத்தை இழந்து இருளில் தத்தளிக்கும் மக்கள்.!
ஜப்பான் நாட்டில் உள்ள தென்மேற்கு பகுதியான கியாஸூ தீவினை சக்திவாய்ந்த நான்மடோல் புயலானது தாக்கியது. இந்த புயல் 162 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதால், நூற்றுக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளது. மின்கம்பங்கள் சரிந்து, கட்டிடத்தின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டது.
சூறாவளி காற்றோடு கனமழை பெய்த காரணத்தால், தாழ்வான பகுதியில் வெள்ளம் புகுந்து சாலைகள், மேம்பாலங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. புயலை தொடர்ந்து மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், இலட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கி இருக்கின்றன.
இதனால் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை புயலின் தாக்கத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 100 பேர் காயம் அடைந்துள்ளனர். மக்கள் வீடுகளை இழந்துள்ள காரணத்தால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.