#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
96 வது ஆஸ்கர் விழாவில் நிர்வாணமாக மேடையில் தோன்றிய ஜான் சினா.! அரங்கத்தில் பரபரப்பு.!
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடந்து வரும் 96வது ஆஸ்கர் விருது விழாவில் மல்யுத்த வீரரும், நடிகருமான ஜான் சினா நிர்வாணமாக தோன்றி மக்களிடம் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தினார். அவர் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதை 'புவர் திங்ஸ்' படத்திற்கு வழங்குவதற்காக இவ்வாறு தோன்றியுள்ளார்.
1974 ஆம் ஆண்டில், 46வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் டேவிட் நிவன் எலிசபெத் டெய்லரை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த போது, ஒரு மனிதர் நிர்வாணமாக மேடையின் மீது ஓடியுள்ளார். இது அகாடமி விருதுகளின் போது நடந்த வேடிக்கையான தருணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதைப்போல ஜான் சினா இப்போது செய்திருப்பது பலவகையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது.
விழாவை தொகுத்து வழங்கிய ஜிம்மி கிம்மலுடைய பரிந்துரையின் பேரில் ஜான் சினா இவ்வாறு செய்தது தெரியவந்துள்ளது. முழு நிர்வாணமாக ஜான் சினா தோன்றுவதற்கு உண்டான வழிகளை கிம்மல் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். எனினும் தனது அந்தரங்க உறுப்புகளை ஜான் சினா பரிசு பெற்றவரின் பெயர் அடங்கிய கவரைக் கொண்டு மறைத்துக் கொண்டார்.
அவர் கவரை திறக்க முடியாமல் திணறவே, விளக்குகள் அணைக்கப்பட்டன. பின்பு ஜான் சினா அங்கிருந்த தங்க நிற திரையை ஆடை போன்று அணிந்து மேடையில் மீண்டும் தோன்றினார். தான் முழு நிர்வாணமாக தோன்ற விரும்பவில்லை என்றும் கிம்மலிடம் ஜான் சினா தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.