பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
கர்நாடக மாநிலத்தில் பரவியது ஓமிக்ரான் கொரோனா வைரஸ்? - முதல்வர் பசவராஜ் பொம்மை.!!
தென்னாபிரிக்க நாட்டில் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் பரவியுள்ள நிலையில், அதிவேகமாக பரவும் தன்மையை கொண்டது என்ற காரணத்தால், உலக நாடுகள் மீண்டும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளன. இந்த விஷயம் தொடர்பாக கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களை சந்திக்கையில் பேசினார்.
கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த பசவராஜ் பொம்மை, "கேரளாவில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு வருபவர்கள் காரணமாக கொரோனா அதிகரிப்பதாக தெரியவருகிறது. கேரள மாநிலங்களை ஒட்டியுள்ள தட்ஷிணா கன்னடா, சாம்ராஜ்நகர், மைசூர் மாவட்ட எல்லைகள் கண்காணிக்கப்படுகிறது.
கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு வரும் நபர்கள் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே மாநிலத்திற்குள் அனுமதி செய்யப்படுவார்கள். 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். கொரோனா பரிசோதனையை மாநிலத்திற்குள் அதிகரிக்கவும் உத்தரவிப்பிடடுள்ளது.
ஹாங்காங், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் ஓமிக்ரான் வகை கொரோனா பரவியுள்ளது. உலக சுகாதார நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நமது மாநிலத்தில் தற்போது வரை புதிய வரை கொரோனா பரவவில்லை. மைசூர், தார்வார், பெங்களூர் நகரங்களில் மாணவர் விடுதியில் கொரோனா அதிகரித்துள்ளது" என்று தெரிவித்தார்.