-40 டிகிரி குளிரில் சுழன்று வீசிய சூறைக்காற்று; மரணபீதியை தந்த மங்கோலியா நாட்டின் வீடியோ.!



Magnolia Winter -40 Freezing Cold With Heavy Wind 

 

கிழக்கு ஆசிய கண்டத்தில், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளை எல்லைப்பரப்பாக கொண்ட நாடு மங்கோலியா. உலகின் மிக மோசமான மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான மங்கோலியாவில் 3.5 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர்.

கடல் இல்லாத, முழுக்க முழுக்க மலைகளால் இயற்கை நிலப்பரப்பை கொண்ட மங்கோலியா, உலகின் மிகக்கடுமையான குளிர் பிரதேசங்களில் ஒன்றாகவும் அறியப்படுகிறது. அங்குள்ள மக்கள் பெரும்பாலும் புத்த மத கோட்பாடுகளை கடைபிடித்து வருகின்றனர். 40% மக்கள் எந்த விதமான மதத்தையும் பின்பற்றவில்லை. 

இதையும் படிங்க: நிர்வாணமாக வசிக்கும் மக்கள்.. காரணம் என்ன?

இயற்கை எழில் நிறைந்த பள்ளத்தாக்கு, கடுமையான பாலைவனம் என இயற்கை அரனின் உச்சகட்ட வெப்பமும், குளிரும் நிலவும் நாடாக இருக்கும் மங்கோலியாவில், பனிக்காலத்தில் -40 டிகிரி வரை வெப்பநிலை செல்லும். அதனுடன் கடுமையான குளிர் காற்றும் சூறைக்காற்று போல வீசும்.

தற்போது மங்கோலியாவில் -40 டிகிரி சூழலில் பலத்த சூறைக்காற்று வீசுவது தொடர்பான காட்சி, அங்கு சாலையில் பயணித்த வாகன ஓட்டி ஒருவரால் எடுக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: வீட்டுப்பாடம் செய்யாத மகன்; கண்டித்ததால் தந்தை போதைப்பொருள் வைத்திருப்பதாக போலீசுக்கு தகவல்.!!