திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஓரினசேர்கையில் ஈடுபடும் ஆண் குரங்குகள்; ஆய்வில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
இலண்டன் நாட்டில் உள்ள இம்பரியல் கல்லூரி விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில், குரங்குகள் ஓரினசேர்க்கை கொண்டுள்ள அரிய தகவல் கண்டறியப்பட்டுள்ளது.
விலங்குகளின் பாலியல் நடத்தை தொடர்பாக Nature Ecology & Evaluation இதழில் வெளியான ஆய்வு முடிவுகளின்படி, இந்த தகவல் தெரியவந்துள்ளது.
குரங்குகளின் பாலியல் நடவடிக்கை தொடர்பாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்கையில், 72% குரங்குகள் ஓரினசேர்க்கை விசயத்தில் ஈடுபட்டு இருக்கின்றன.
இவ்வாறான ஓரினசேர்க்கை விசயத்தில் ஈடுபட்டுள்ள குரங்குகள், பெண் துணையுடன் இணையும்போது நல்ல செயல்திறனை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அங்குள்ள கையோ சாண்டியாகோ, புவேர்ட்டோ ரிக்கோ வெப்பமண்டல தீவுகளில் வசித்து வரும் 236 ஆண் குரங்குகளை வைத்து நடத்திய சோதனையில் இவை உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் விலங்குகளிடம் ஓரினசேர்க்கை இருப்பதாக முடிவுக்கு வந்துள்ள விஞ்ஞானிகள் குழு, இதனை இயற்கைக்கு முரண் என்றும் வகைப்படுத்துகிறது.