மைக்ரோசாப்ட் சேவைகள் உலகம் முழுவதும் முடங்கியது... பயனர்கள் புகார்...



Microsoft services down around the world… users complain…

மைக்ரோசாப்டின் அவுட்லுக், டீம்ஸ், மைக்ரோசாப்ட் 365 போன்றவற்றின் சேவைகள் உலகம் முழுவதும் முடங்கியது. 

நேற்று உலகம் முழுவதும் பலமணி நேரம் மைக்ரோசாப்டின் அவுட்லுக், டீம்ஸ், மைக்ரோசாப்ட் 365 போன்றவற்றின் சேவைகள் முடங்கின. அவுட்லுக் சேவை முடங்கியதால் மின்னஞ்சல்களை பெறவும், அனுப்பவும் முடியவில்லை என பயனர்கள் தெரிவித்தனர். 

உலகம் முழுவதும் பாதிப்பு இருந்த போதிலும் இந்திய பயனர்களே அதிகம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் பயனர்களும் மைக்ரோசாப்டின் சேவைகள் முடங்கியதாக புகார் தெரிவத்துள்ளனர். 

இந்நிலையில், மைக்ரோசாப்ட் 365 டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நெட்வொர்க்கில் சிக்கல் இருந்ததாகவும், அதற்கு தீர்வு காணும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், மேற்கொண்டு சிக்கல் எதுவும் இல்லாமல் இருக்கும் வகையில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.