மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பீட்சா போல டெலிவரி செய்யப்படும் துப்பாக்கி.. ஏ.கே 47 வரை கிடைக்குதாம்., பாகிஸ்தானில் பகீர்.!
பாகிஸ்தான் நாட்டில் செல்போன் மூலமாக எளிய முறையில் துப்பாக்கியை வாங்கும் சூழ்நிலை இருப்பதாக அங்குள்ள தொலைக்காட்சியில் பகீர் செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள கர்ச்சியை சேர்ந்தவர் துப்பாக்கி வாங்கியது தொடர்பாக, சாமா என்ற தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், "துப்பாக்கி விற்பனை செய்யும் பிரதிநிதியை தொடர்பு கொண்டு துப்பாக்கி வேண்டும் என்று தெரிவித்த நிலையில், கைபர் பாகத்ன்துவா மாகாணத்தில் இருக்கும் தாரா அடம்கேல் பகுதியில் இருந்து பீட்ஸா டெலிவரி போல வீட்டிற்கே அனுப்பி வைக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
மேலும், துப்பாக்கியை டெலிவரி செய்ய வரும் நபர் துப்பாக்கி உரிமம் குறித்து கூட கேட்பது இல்லை. பேச்சுவார்த்தைகள் அனைத்தும் போன் மூலமாக நடைபெற்று, ரூ.10 ஆயிரம் பணம் அனுப்பியதும், துப்பாக்கி டெலிவரி செய்யப்பட்டது. துப்பாக்கி சரியாக வேலை பார்க்கிறதா? என டெலிவரிக்கு பின்னர் சோதனை செய்து, மீதமுள்ள ரூ.28 ஆயிரம் செலுத்தப்பட்டது என கூறியுள்ளார்.
கராச்சி நகரை மையமாக வைத்து 2 அமைப்பை சார்ந்த கும்பல் துப்பாக்கி விற்பனை செய்து வருவதாகவும், இவர்கள் இருவரும் முதலில் துப்பாக்கி விற்பனை மற்றும் டெலிவரி என 2 குழுவாக பிரிந்து செயல்பட்டு வருவதாகவும், கைத்துப்பாக்கி முதல் ஏ.கே. 47 வரை அனைத்து துப்பாக்கியும் விற்பனை செய்யப்படுகிறது என்றும் உள்ளூர் ஊடகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நேரடியாக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக இருந்து வரும் பாகிஸ்தானில், துப்பாக்கி உரிமம் வைத்திருப்பது கூட சோதனை செய்யாமல் அதனை டோர் செலிவரி செய்து வரும் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.