53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
92 வயதில் 67 வயது காதலியை மணக்க இருக்கும் அமெரிக்க பிரபலம்.! 90's கிட்ஸ்க்கு வயிற்றெரிச்சல்.!
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தில் நியூயார்க் போஸ்ட் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உட்பட பல அமெரிக்க செய்தி நிறுவனங்களின் உரிமையாளராக திகழ்ந்தவர் ரூபர்ட் முர்டோக். தற்போது 92 வயதாகும் இவர், 67 வயதான ஒரு ஓய்வுபெற்ற மூலக்கூறு உயிரியலாளரான மாஸ்கோவை சேர்ந்த எலினா ஜுகோவா என்பவரை 5ஆம் முறையாக திருமணம் செய்ய உள்ளார்.
இந்த திருமணமானது அமெரிக்காவில் உள்ள அவரது திராட்சை தோட்டத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபாக்ஸ் மற்றும் நியூஸ் கார்ப் நிறுவனங்களின் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகிய பிறகு இந்த செய்தி வெளியாகியுள்ளது.
ரூபர்ட் முர்டோக் தற்போதுள்ள தனது காதலியை தனது மூன்றாவது மனைவியின் மூலம் சந்தித்ததாக கூறப்படுகிறது. நடிகையும் மாடலுமான ஜெர்ரி ஹாலுடனான அவரது நான்காவது திருமணம், கடந்த 2022ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
கடந்த ஆண்டு ரூபர்ட் தனது ஊடக நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். மேலும் அதன் பொறுப்புகளை தனது மகனான, லாச்லனிடம் ஒப்படைத்துள்ளார். தற்போது தனது 5வது திருமணத்திற்கான ஏற்பாடுகளை விமரிசையாக செய்து வருகிறார். வருகிறது ஜூன் மாதம் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது. ஒருமுறை கூட திருமணமாகாத நம்ம ஊர் 90ஸ் கிட்ஸ்களுக்கு இந்த செய்தி சற்று வயிற்றெரிச்சலை ஏற்படுத்த தான் செய்கிறது!