மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#RussiaUkraine: மூன்றாம் உலகப்போர் ஆரம்பித்துவிட்டது. ரஷிய அரசு செய்தி நிறுவனம் பரபரப்பு தகவல்.!
நாங்கள் நேட்டோ உட்கட்டமைப்புக்கு எதிராக போராடி வருகிறோம், மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டது என ரஷிய அரசு செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா படையெடுத்து சென்று ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், உக்ரைனை சரணடையச்சொல்லி ரஷியா படையெடுப்பை தொடர்ந்து வருகிறது. பிராந்திய பாதுகாப்பு விவகாரத்தில் ரஷியா படையெடுத்து சென்றாலும், வன்மத்துடன் இருக்கும் மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் ரஷியாவின் மீது பல்வேறு தடையை விதித்து இருக்கிறது.
உக்ரைன் நாட்டினை ரஷியா தனது ஆயுதத்தால் குறைந்தளவே உபயோகித்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷியாவுக்கு சொந்தமான போர்க்கப்பல் கருங்கடலில் உக்ரைன் படைகளால் அளிக்கப்பட்டது. இதனால் ரஷியா - உக்ரைன் போர் மேலும் சூடேற தொடங்கியுள்ளது. இதற்கு ரஷியா எதிர்பார்த்ததை விட பெரிய அளவிலான பதிலடி கொடுக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், ரஷ்யாவின் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில், மூன்றாம் உலக போர் என்பது தொடங்கிவிட்டது. நாங்கள் நேட்டோ உட்கட்டமைப்புக்கு எதிராக போராடி வருகிறோம் என்று தெரிவித்துள்ளது. இது சூசகமாக நேட்டோ நாடுகளுக்கு விடப்பட்ட எச்சரிக்கை அல்லது உக்ரைன் மீது தாக்குதல் தீவிரமடையும் என்பதற்கான அறிகுறி என வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.