கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
5 நிமிடத்திற்கு ஒரு உயிரிழப்பு: அதிர வைக்கும் ரிப்போர்ட்...!
போதைப்பொருளை அதிகமாக உட்கொள்வதால் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு நபர் இறப்பதாக அமெரிக்க அரசின் அறிக்கைகள் கூறுகின்றன.
அமெரிக்காவில் போதைப்பொருட்களை அளவுக்கதிகமாக உட்கொண்டு தடுமாறும் மக்கள், அமெரிக்க தெருக்களில் ஒரு பிரச்சனையாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு நபர் போதைப்பொருளை அதிகமாக உட்கொள்வதால் இறப்பதாக அமெரிக்க அரசின் அறிக்கைகள் கூறுகின்றன.
அமெரிக்காவில், போதைப் பொருள் ஒன்று புதிதாக விற்பனைக்கு வந்துள்ளது. அதன் பெயர் டிரான்ஸ் (tranq) அல்லது சைலாசின்(Xylazine). அந்த போதைப் பொருளை மக்கள் பயன்படுத்துவதால் தோல் அழுகுவதோடு, ஜாம்பி போல நடந்துகொள்கின்றனர் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போதை பொருளை ஜாம்பி போதைப்பொருள் ( Zombie Drug) என்று அழைக்கின்றனர். இது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து அமைப்பால் அங்கீரிக்கப்பட்ட மருந்தாக உள்ளது. அமெரிக்காவில் இந்த மருந்தை விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கால்நடை மருத்துவமனைகளில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த மருந்தை பயன்படுத்தி இந்த போதைப் பொருள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சைலாசின் மனிதர்களுக்கு பயன்படுத்தக் கூடாது. அதுவும் இதனை ஓவர் டோஸ் எடுத்துக்கொண்டால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் இந்த ஜாம்பி போதைப்பொருளை பயன்படுத்தினால் அடுத்த சில நாட்களுக்கு தூக்கமே வராது என்கின்றனர். அதுமட்டுமின்றி தீவிர மன அழுத்தம், கை, கால்களில் மோசமான புண்கள் ஏற்படும் என்கின்றனர். இதை கவனிக்காமல் விட்டால் தோல் முழுவதும் பாதிப்படைந்து அழுகிவிடும் என கூறப்படுகிறது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் மட்டும் 2021-ஆம் ஆண்டில், இந்த போதைப் பொருளை அதிகமாக பயன்படுத்தியதால், 2,668 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த போதை பொருளை உட்கொண்டதும் உச்சகட்ட போதை அடைவதால், அதனை பயன்படுத்துபவர்கள் மிகுந்த உற்சாகம் அடைகின்றனர் என்றும், அவர்கள் எங்கு இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் நினைவில் இருக்காது என்றும் கூறுகின்றனர்.
இந்த போதை மருந்தை உட்கொண்டு ஜாம்பிக்கள் போல சாலைகளில் ஒருசிலர் சுற்றித்திரியும் வீடியோ வெளியான நிலையில், அவர்கள் இந்த போதைப் பொருளை பயன்படுத்தியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களிடமிருந்து இவர்கள் வேறுபட்டு தெரிகின்றனர்.
இந்த போதை மருந்தை பயன்படுத்தி அதனால் பாதிக்கப்பட்ட 28 வயதான இளைஞர் ஒருவர் அமெரிக்க நாளிதழுக்கு அளித்த பேட்டியில், 9 மாதங்களுக்கு முன்பு இந்த போதைப் மருந்தை ஒருமுறை பயன்படுத்தியதாகவும், இப்போது கால் மற்றும் பாதத்தில் ஓட்டை விழுந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
நியூயார்க்கில், 2021-ஆம் வருடத்தில் மட்டும் 2,668 பேர் இந்த போதைப் மருந்தை அதிகமாக பயன்படுத்தியதால் உயிரிழந்துள்ளதாக அம்மாகாண சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த போதைப் பொருளை தடுக்காமல் அப்படியோ விட்டால், கொரோனா பாதிப்பால் உண்டான உயிரிழப்புகளை விட உலகம் முழுவதும் தீவிர பாதிப்புகளை இந்த போதை பொருள் ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.