"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
பெண் தோழியின் போட்டோவை ஆபாச டெலகிராம் குழுவில் பகிர்ந்த நண்பன்; பாய் பெஸ்டி பிரியைகளே கவனம்..!
சிங்கப்பூர் நாட்டை சேர்ந்தவர் டான் வெங் கை ஜூன் (வயது 23). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தொழில் ஆலோசனைகளை கூறி வரும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 21 வயது இளம்பெண்ணுடன் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இருவரும் நட்பு ரீதியாக பழகி வந்த நிலையில், டான் ஜூன் பெண்ணின் இன்ஸ்டாகிராம் ஐடி-யில் இருந்து அவரின் சில புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்நிலையில், டான் ஜூன் டெலக்ராமில் ஆபாச குழுவில் உறுப்பினராக இருந்து வந்ததாக தெரியவருகிறது.
அவர் தனது தோழியின் புகைப்படங்களை பதிவிட்டு, அத்துடன் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் இணைக்கும் வகையில் லிங்க் கொடுத்துள்ளார். டான் ஜூனின் நண்பர் ஒருவர், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நண்பர் ஆவார்.
டானின் செயல்பாடுகளை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக இளம்பெண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்மணி டானுக்கு தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை எடுக்கவில்லை.
பின் தாமதமாக பெண்ணின் விபரங்கள் டான் ஜூனால் நீக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பெண்ணை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்பு கொண்ட சிலர், பாலியல் நடவடிக்கைக்கு எவ்வுளவு பணம்? என விலைபேச தொடங்கியுள்ளனர்.
இதனால் நிலைமையை உணர்ந்து மனவேதனையடைந்த பெண்மணி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி டான் ஜூனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் நீதிபதி முன் தனது குற்றத்தையும் ஒப்புக்கொண்டார்.