96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அப்படிப்போடு; இனி புகைபிடிக்க குறைந்தபட்ச வயது 21... சிறார்கள் சிகிரெட் பிடிக்க அதிரடி தடை.!
உலகளவில் புகைபிடிக்கும் பழக்கம் என்பது தீராத தொற்று வியாதி போல பரவிக்கிடக்கிறது. புகைப்பழக்கத்தால் புற்றுநோய் ஏற்படும் என்ற அபாயத்தை நன்கு உணர்ந்தும் பலரும் அதனை விரும்பி புகைத்து வருகின்றனர்.
இந்தியா, இந்தோனேஷியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இன்றளவில் இளம் வயதுகொண்ட சிறார்களின் புகைப்பழக்கம் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக 10 முதல் 14 வயதை கடந்த சிறார்களும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்.
கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
அமெரிக்கா & இங்கிலாந்து போன்ற நாடுகளில் இ-சிகிரெட் பிடித்து பலரும் உயிரிழக்கின்றனர். இந்நிலையில், இந்தோனேஷியாவில் சிறார்களின் புகைபிடிக்கும் விகிதம் அதிகரிக்கவே, அந்நாட்டு அரசு புகை பொருட்கள் மீதான கலால் வரியை 15 % உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறார்களுக்கு சிகிரெட் வழங்க, குறைந்தபட்ச புகைபிடிக்கும் வயதை 21 ஆக அதிகரித்து இருக்கிறது.