மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சத்தம் போட்ட பூனை.. வெறிகொண்டு துரத்தி வந்த பாம்பு.. பதறியடித்து ஓடிய நபர்..! வைரல் வீடியோ..
பசியோடு பூனையை சாப்பிடுவதற்காக துரத்திவந்த பாம்பு ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
தாய்லாந்து நாட்டின் நொந்தபுரி (Nonthaburi) பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது வீட்டின் முன் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அவரது வளர்ப்பு பூனை சற்று பயத்துடன் சத்தமிடவே, அந்த நபர் அங்கு சென்று பார்த்தபோது பெரிய பாம்பு ஒன்று பூனையை சாப்பிட முயன்றுள்ளது.
இதனால் பயந்துபோன அவர், அருகில் இருந்தவர்களை துணைக்கு அழைத்துள்ளார். இதனிடையே அந்த பெரிய பாம்பு அந்த பூனையை சாப்பிடுவதில் தீவிரமாக இந்தநிலையில், அந்த பூனையை துரத்திக்கொண்டு வருகிறது. இந்நிலையில் அந்த நபர் தனது பூனையை தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் ஓடுகிறார்.
ஆனால், அப்போதும் விடாமல் அந்த பாம்பு அந்த பூனையை துரத்திக்கொண்டு வீட்டின் வாசல் முன் சென்று நிற்கிறது. பின்னர் அந்த நபர் வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே வந்து மீண்டும் அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைக்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தநிலையில், தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.