மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐ.எஸ் அமைப்பினர் சிறையை தகர்க்க முயற்சி.. பதில் தாக்குதலில் 79 பேர் பலி..!
சிரிய நாட்டில் அமெரிக்க படைகளின் உதவியோடு ஒடுக்கப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் மீண்டும் தனது அட்டகாசத்தை அதிகரித்து வருகிறது. சிரியாவின் வடகிழக்கே குர்து போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நகர்களில் ஐ.எஸ் ஆதிக்கம் அதிகரித்துள்ளன.
குர்து போராளிகளின் வசம் இருக்கும் ஹசரா நகரில் ஐ.எஸ் அமைப்பின் தலைவர்கள் உட்பட 3,500 பயங்கரவாதிகள் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில், சிறைச்சாலை மீது ஐ.எஸ் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சிறையினை தகர்த்து தங்களது இயக்க போராளிகள் மற்றும் தலைவர்களை விடுவிக்கும் நோக்கில் தாக்குதல் நடந்துள்ளது. சிறையை பாதுகாத்து வரும் குர்து இன போராளிகள் பதில் தாக்குதல் நடத்தி, சிறையை நெருங்க விடாமல் தடுத்துள்ளனர்.
இதனால் இருதரப்பு சண்டை நடந்த நிலையில், துப்பாக்கி சண்டையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் 77 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குர்து இன போராளிகள் 39 பேரும் பலியாகியுள்ளனர்.