மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#பரபரப்பு.. இனி 'ட்விட்டரின் பெயர் "x".! அதிரடியாக லோகோவை மாற்றிய எலான் மஸ்க்.!
சமூக வலைதளங்களில் பிரபலமான ட்விட்டர் நிறுவனத்தின் லோகோவை மாற்றி இருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான்மஸ்க் தெரிவித்திருக்கிறார்.
ட்விட்டர் சமூக வலைதளம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே ஒரு குருவியின் உருவம் தான் அதன் லோகோவாக இருந்தது. அதனை தற்போது மாற்றி இனி X என்பது லோகோவாக இருக்கும் என அறிவித்திருக்கிறார் எலான் மஸ்க்.
மேலும் ட்விட்டர் கார்ப்பரேஷன் என்று அழைக்கப்பட்டு வந்த நிறுவனம் விரைவிலேயே X கார்ப்பரேஷன் என அழைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ட்விட்டரில் வீடியோ ஆடியோ மெசேஜிங் பேமெண்ட் பேங்கிங் உள்ளிட்ட ஒருங்கிணைந்த வசதிகள் அனைத்தும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
— Elon Musk (@elonmusk) July 23, 2023
இதற்கு முன்பாக இவர் ட்விட்டர் லோகோவை மாற்றி சில நாட்கள் நாய் படத்தை வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பல அதிரடி மாற்றங்களை செய்து சர்ச்சை ஏற்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.