மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: உக்ரைனின் மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷியா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
மரியுபோல் நகரை முழுவதுமாக கைப்பற்றியதாக ரஷியா அறிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா பிராந்திய பாதுகாப்பு கருதி படையெடுத்து சென்று 50 நாட்களையும் கடந்து போர் நடைபெற்று வருகிறது. இதனை மே மாதம் நடுவில் முற்றிலும் முடிவுக்கு கொண்டு வரவும் ரஷியா திட்டமிட்டு இருக்கிறது. இதனால் உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்கள் மீது பல்முனை தாக்குதல் நடத்தப்படுகிறது.
இந்த போரினால் மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் ரஷியாவின் மீது கொண்டிருந்த பனிப்போரை சாதகமாக்கி, அதற்கு எதிராக செயல்படுகிறது. மேலும், உக்ரைனுக்கு தேவையான இராணுவ தளவாடங்கள், பொருளாதார உதவியை செய்து வருகிறது. ரஷியாவின் மீது பல்வேறு பொருளாதார தடைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், உக்ரைனில் உள்ள கடற்கரை நகரில் ஒன்றான மரியுபோல் நகரை முழுவதுமாக கைப்பற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலை தவிர்த்து, பிற பகுதிகள் அனைத்தையும் ரஷியா கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரஷிய அதிபர் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.