மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரேயொரு லான்சர்.. 300 உக்ரைன் வீரர்களை கொன்று குவித்த ரஷிய இராணுவம்.. அதிர்ந்துபோன உக்ரைன்.!
ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து சென்றுள்ள நிலையில், தினம் தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர்தொடுத்து சென்று 5 மாதங்கள் ஆகியுள்ளன. கிழக்கு உக்ரைனை ரஷியா தன்வசம் கொண்டு வர தாக்குதல் நடத்தி வருகிறது. அங்குள்ள பல்வேறு நகரங்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கிழக்கு உக்ரைனில் இருக்கும் டோனஸ்டிக் மாகாணத்தின் பள்ளியில் உக்ரைன் இராணுவ வீரர்கள் தங்கியிருந்துள்ளனர். அப்போது, அந்த பள்ளியின் மீது ரஷிய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்குதலில் 300 உக்ரைன் படை வீரர்கள் உயிரிழந்ததாக ரஷிய தரப்பு தெரிவிக்கும் நிலையில், உக்ரைன் இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும், பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 23 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.