மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முற்றுப்பெறுகிறதா ரஷியா - உக்ரைன் போர்?.. ஐ.நா பொதுச்செயலாளர், ரஷிய ரஷிய அதிபர் விரைவில் சந்திப்பு..!
ரஷியா பிராந்திய பாதுகாப்பு கருதி உக்ரைனின் மீது படையெடுத்து சென்று அதனை தன்வசப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கு ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் ஆயுத மற்றும் பொருளாதார உதவியை செய்து வருகின்றன. ரஷியாவின் மீது பல்வேறு பொருளாதார தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இருநாட்டு பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் என இந்தியா மற்றும் சீனா கோரிக்கை வைத்துள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு தேவையான உதவியை செய்யவும் தயாராக உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. ரஷியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, இந்தியாவிடம் பிரச்சனையை மேற்கோளிட்டு பேசியுள்ளது. அங்குள்ள பல நகரங்கள் ரஷ்ய படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.
உக்ரைன் - ரஷியா படைகள் இடையே போர் உச்சகட்டத்துடன் நடந்து வரும் நிலையில், புச்சா நகரில் இனப்படுகொலைக்கு இருதரப்பிலும் குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ பிரதி வாரத்தில் நேரில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைதி பேச்சுவார்த்தை மூலமாக உக்ரைன் - ரஷியா பிரச்சனையை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.