அடேங்கப்பா.. கரை ஒதுங்கிய இறந்த திமிங்கலத்தில் 9.5 கிலோ எடைகொண்ட மிதக்கும் தங்கம்.!!



  Whale Amber Gris 

 

லா பால்மாவின் கேலரி தீவில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, திமிங்கலத்தை ஆய்வு செய்தபோது செரிமான அமைப்பில் உற்பத்தி செய்யப்படும் ஆம்பெர்கிரிஸ் இருப்பது தெரியவந்தது. 

மிதக்கும் தங்கம் என்று அழைக்கப்படும் 9.5 கிலோ எடை கொண்ட ஆம்பெர்கிரீஸ், 100 திமிங்கலங்களில் ஒன்றில் மட்டுமே காணப்படும். இதனை மருத்துவம் மற்றும் வாசனை திரவம் ஆகியவற்றில் பயன்படுத்தலாம்.