53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
அதிவேகத்தில் சோகம்; 4 சிறார்கள் உட்பட 7 பேர் பரிதாப பலி.. சாலையோர மரத்தில் கார் மோதி பயங்கரம்.!
சுப நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியோர், தங்களின் அதிவேக பயணத்தால் உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டம், ஷிவம்பேட், ஏடுலாப்பூர் கிராமத்தின் புறநகர் சாலையில், சாலையோர மரத்தின் மீது மோதிய கார், கால்வாயில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் 3 இளைஞர்கள், 4 சிறார்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: கார் - இருசக்கர வாகனம் மோதிய நொடியில் பயங்கர வெடிவிபத்து; அதிவேகம், அலட்சியத்தால் 3 உயிர்கள் பலி.!
உயிரிழந்தவர்கள் ஷிவம்பேட் பகுதியில் வசித்து வரும் சிவராம் (வயது 55), துர்கம்மா (வயது 45), அனிதா (வயது 30), பிந்து (வயது 14), சிரவாணி (வயது 12), சாந்தி (வயது 45), மம்தா (வயது 16) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓட்டுநரான நாம் சிங் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார்.
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார்
காவல்துறையினரின் விசாரணையில், இவர்கள் அனைவரும் தள்ளாப்பள்ளி பகுதியில் வசித்து வரும் குடும்ப உறவினரின் சுப நிகழ்ச்சியில் கலந்துவிட்டு, பின் மீண்டும் வாகனத்தில் வந்தபோது விபத்தில் சிக்கி இருக்கின்றனர். கார் அதிவேகமாக சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: மரணத்தின் வாயில் வரை சென்று வீடு திரும்பிய தம்பதி; கிணற்றில் பாய்ந்த கார்.. பதறவைக்கும் சம்பவம்.!