மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது ஊரை காலி பண்ணி போனா இவ்ளோ பணம் தருவீங்களா..? எந்த நாட்டில்..?
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மட்டும் சுமார் 3 கோடியே 74 லட்சம் மக்கள் வசித்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதனைத் தொடர்ந்து அதிகளவு மக்கள் அங்கு குடியேறி வருவதால் மக்களுக்கு தேவையான குடிநீர், தங்குமிடம் போன்றவற்றை வழங்குவதில் ஜப்பான் அரசுக்கு சிக்கல்கள் எழுந்துள்ளது.
மேலும் மக்கள் நெரிசல் காரணமாக நகரின் வளர்ச்சியும், நாட்டின் வளர்ச்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கை கூறுகிறது.
அந்த வகையில் இதனை கட்டுப்படுத்தும் விதமாக டோக்கியோவை விட்டு வெளியேறுபவர்களுக்கு ரூ. 6.35 லட்சம் வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பானது வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்றும் ஜப்பான் அரசு கூறியுள்ளது.