மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மைனர் பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம்!
16 வயது சிறுமியை காதலித்த ஆட்டோ டிரைவர் அவரை சந்திக்க அவருடைய வீட்டிற்கு சென்றதால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே பெரும்பாறை பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ்( 27 ). இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார் இதனால் ஈக்காட்டுறை சேர்ந்த 16 வயது சிறுமியை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சந்திப்பு நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் 18 வயது நிரம்பாத அச்சிறுமியின் பெற்றோர்கள் திருமணத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து தர்மராஜை சந்திக்க வருமாறு காதலி அழைப்பு விடுத்ததால் தனது நண்பர் ஏழுமலையானை துணைக்கு அழைத்துக்கொண்டு சனிக்கிழமை இரவு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் வருவதை பார்த்த அந்தப் பெண்ணுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்கள் இருவரையும் தாக்க தொடங்கியுள்ளார்கள். இதனால் இருவரும் வெவ்வேறு திசையில் பிரிந்து ஓடி உள்ளார்கள். ஆனால் வெகு நேரமாகியும் தர்மராஜ் வீடு திரும்பவில்லை.
இதனால் தர்மராஜின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் தர்மராஜை தேடியுள்ளனர். இந்நிலையில் ஈக்காட்டூர் பகுதியில் நேற்று காலை (ஞாயிறு) சடலமாக கண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் இதற்கு அந்த பெண்ணுடைய குடும்பத்தினர் தான் காரணம் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, அவர்களை சமாதானம் செய்து, தலைமறைவாகிய பெண்ணுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.