குளிக்க சோம்பேறிதனமா.? உங்களையும் மெஷின்ல போட்டுரலாம்.!! நவீன இயந்திரம் அறிமுகம்.!!

உலகிலேயே மிகச் சிறந்த படைப்பாக மனிதன் கருதப்பட்டாலும் மிகவும் சோம்பேறியான உயிரினமாகவும் மனித இனம் தான் இருந்து வருகிறது. தொழில் புரட்சி மற்றும் கல்வி அறிவில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றின் காரணமாக மனிதன் தனது வேலைகளை எளிமையாக்குவதற்கு பல்வேறு வகையான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினான். அந்த வரிசையில் தற்போது துணிகளை துவைப்பதை போல் மனிதனையும் தானாகவே குளிப்பாட்டி உலர வைக்கும் ஏஐ மிஷின் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி
ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் என அழைக்கப்படும் ஏஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பல்வேறு விதமான பணிகளும் மிகவும் எளிமையாகி இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தில் கணிப்பொறிக்கு கட்டளைகளை கொடுத்தால் அவை எளிதாக அந்த வேலையை செய்து முடிகின்றன. தற்போது இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு விதமான புதிய கண்டுபிடிப்புகளும் உருவாகி வருகின்றன. இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மனித இனத்தின் வேலைகளை எளிமையாக்குவதற்கு பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பல்வேறு வகையான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறது. இதனைப் போன்ற தகவல் தொழில்நுட்பத்தின் ஜாம்பவானான ஜப்பான் தானியங்கி குளிப்பாட்டும் இயந்திரத்தை கண்டுபிடித்திருக்கிறது.
தானியங்கி குளிப்பாட்டும் வாஷிங் மெஷின்
ஜப்பானை சேர்ந்த சயின்ஸ் கோ என்ற நிறுவனம் மனித வாஷிங்மெஷினை கண்டுபிடித்திருக்கிறது. சயின்ஸ் கோ என்ற இந்த நிறுவனம் தொடர்ச்சியாக ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதர்களின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு வகையான ரோபோக்களை கண்டுபிடித்து வருகிறது. தற்போது இந்த கண்டுபிடிப்புகளின் வரிசையில் மனிதர்களை குளிப்பாட்டும் இந்த வாஷிங்மெஷினும் இணைந்திருக்கிறது.
இதையும் படிங்க: விரைவில் வெள்ளை மாளிகைக்கு வரும் சுனிதா & புட்ச்.. அதிபர் டிரம்ப் கொடுக்கும் பரிசு.!
மனித வாஷிங் மெஷினின் சிறப்பம்சங்கள்
வீட்டிலேயே ஸ்பா குளியலை தருவதைப் போன்ற அனுபவத்தை கொடுக்கும் வகையில் இந்த மெஷின் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இயந்திரத்தில் இருக்கக்கூடிய அல்ட்ராசோனிக் அலைகள் நம் உடலில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் வாட்டர் ஜெட்கள் நமது தோளில் ஊடுருவி சென்று சுத்தப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி குளிக்கும் போது 50 சதவீதம் தண்ணீரை சேமிக்கலாம் என இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 2030 ஆம் வருடத்திலிருந்து இந்த இயந்திரம் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை: பிஐஎஸ் முத்திரை இல்லாத பொருட்கள் விற்பனை? அமேசான், பிளிப்கார்ட் குடோனில் ரூ.36 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்.!