மதுப்பிரியர்களை வயிற்றில் அடித்த அரசு; பீருக்கு 10, குவாட்டருக்கு 20 விலை உயர்வு..!



liquor prices hike for all brands in telangana

மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க மதுபானங்களின் விலையை 20 முதல் 25 சதவீதம் வரை தெலுங்கானா அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.

தெலுங்கானாவில் அனைத்து வகை மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் ஆண்டு வருவாய் ரூ.6000 முதல் ரூ.7000 கோடி வரை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், ரூ.495 மதிப்பிலான 750 மி.லிட்டர் அளவு கொண்ட ‘புல்’ பாட்டில் ஒன்றின் விலை ரூ.120 அதிகரித்து ரூ.615 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், அனைத்து குவாட்டர் மதுபாட்டிலின் விலையும் ரூ.20 வரை அதிகரித்துள்ளது. மேலும், அனைத்து ‘பீர்’வகைகளும் ஒரு பாட்டிலுக்கு குறைந்தது ரூ.10 முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.