அழகு தேவதையாய் மின்னும் அஜித் மகள் அனோஷ்கா!! ஹீரோயின் போல் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் இதோ....



actor-ajith-daughter-latest-photi

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அஜித் நடித்துள்ள வலிமை படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளிலும் கடந்த பிப்ரவரி 24 ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் குடும்பத்தினர் புகைப்படங்கள் எப்போதும் இணையத்தில் வெளியானாலும்  அதனை ரசிகர்கள் பெருமளவில் வைரலாக்குவது வழக்கம். அந்த வகையில் சமூக  வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் நடிகை ஷாமிலி தனது சகோதரி ஷாலினி மற்றும் அவரது மகள் அனோஷ்காவுடன் எடுத்துக் கொண்ட செம க்யூட்டான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சின்னக் குழந்தையாக இருந்த அனோஷ்கா கிடுகிடுவென வளர்ந்து ஹீரோயினி போல் உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கமெண்ட்களை  பெற்று வருகிறது.