ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அசோக் செல்வனின் புளூ ஸ்டார் திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில், நடிகர்கள் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, சாந்தனு பாக்யராஜ், இளங்கோ குமரவேல், அருண் பாலாஜி ஆகியோரின் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் புளு ஸ்டார் (Blue Star).
இப்படத்தை இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்தின் இசையமைப்பு பணிகளை கோவிந்த் வசந்தா மேற்கொண்டுள்ளார். அழகன் ஒளிப்பதிவையும், செல்வா ஆர்.கே எடிட்டிங் பணிகளையும் கையாண்டு இருக்கின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்து, தற்போது வெளியீட்டுக்கான பணிகள் நடந்தன. இந்நிலையில், படம் இம்மாதம் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த அறிவிப்பை இயக்குனர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
From 25th worldwide #bluestar ❤️🌸🔥 pic.twitter.com/o4pl0dG94V
— pa.ranjith (@beemji) January 6, 2024