பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி, உடல்நலக்குறைவால் காலமானார்: நொடியில் நடந்த மரணம்.!
தமிழ் திரையுலகில் காமெடி மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகர் போண்டா மணி. இவர் அதிமுக கட்சியிலும் முக்கிய பொறுப்பாளராக இருந்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே கிட்னி செயலிழப்பு தொடர்பான பிரச்சனையை எதிர்கொண்ட போண்டா மணி, மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், அரசியல் கட்சிப்பிரமுகர்களும் தங்களால் இயன்ற உதவி செய்து வந்தனர். இந்நிலையில், நடிகர் போண்டாமணி இயற்கை எய்தினார்.
வீட்டில் இருந்த போண்டாமணி நேற்று திடீரென மயங்கி சரிந்துவிட, குரோம்பேட்டை அரசுமருத்துவமனையில் குடும்பத்தினர் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது.
நேற்று காலைதான் அவர் டயாலிசிஸ் சிகிச்சை முடித்து வீட்டிற்கு திரும்பினார். இரவு 10 மணிக்கு மேல் அவரின் உயிர் நொடியில் பிரிந்துவிட்டது.