#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காமெடி நடிகரின் கண்கலங்கவைக்கும் நிலை.. சிகிச்சையிலிருந்த போண்டாமணிக்கு நடந்த துரோகம்..!
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் போண்டாமணி. இவருக்கு 2 கிட்னியும் செயலிழந்த நிலையில், உயிருக்கு போராடுவதாக கண்ணீர்மல்க திரைப்பிரபலம் ஒருவர் வீடியோ வெளியீட்டதால் பலரும் உதவ முன்வந்தனர்.
இதனை தொடர்ந்து போண்டாமணிக்கு சிகிச்சை நடைபெற்றது. சிகிச்சைக்குபின் வீடு திரும்பிய அவருக்கு சென்னையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் உதவுவது போல பழகியுள்ளார். இது மட்டுமல்லாமல் அவரது மனைவியிடமும் ஏடிஎம் கார்டை வாங்கி சென்றுள்ளார்.
ஆனால் ராஜேஷ் மருந்து வாங்கியது மட்டுமல்லாமல் அந்த ஏடிஎம் கார்டை வைத்து நகைகடையில் நகையும் வாங்கி ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து போண்டா மணியின் மனைவிக்கு தெரியவரவே, காவல்துறையில் புகாரளித்த நிலையில், 1 லட்சத்தை திருடிய ராஜேஷை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் ஏடிஎம் வைத்திருப்பவர்கள் தங்களது ஏடிஎம்-ஐ யாரிடமும் கொடுக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.