பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
20 கிலோ வரை உடல் எடையை குறைத்து இளம் ஹீரோ போல் மாறிய ஜெயராம், இதை பாருங்கள்!
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயராம். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த இவர் தமிழ் சினிமாவிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு மலையாள நடிகர் என்று தெரியாத அளவிற்கு தமிழ் சினிமாவில் தமிழ் சினிமாவில் இவர் மிகவும் பிரபலம்.
அர்ஜுன் நடிப்பில் வெளியான கோகுலம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் பெரிய இடது மாப்பிளை, பஞ்சதந்திரம் போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். கடைசியாக துப்பாக்கி, உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் உடல் எடை சற்று அதிகமாக இருந்த நடிகர் ஜெயராம் சுமார் 20 கிலோ வரை எடையை குறைத்து பார்க்கவே இளம் ஹீரோ போல் மாறியுள்ளார். சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகர் ஜெயரமா இது என கேட்கும் அளவுக்கு உடல் எடை குறைந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.