மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேரளாவுக்கு தமிழ் சினிமாத்துறையில் அதிகமாக நிதியுதவி அளித்த ராகவா லாரன்ஸ்!. அவர் அளிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா?
கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டு மாநிலமே தத்தளித்து வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் மாநிலம் முழுவதும் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அதுமட்டுமின்றி அங்கு பெய்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்து ஏராளமான வீடுகள் இடிந்தும்,நிலச்சரிவினாலும் நாளுக்கு நாள் உயிர் பலி எண்ணிக்கை அதிகரித்து இதுவரை 360 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கேரள மக்கள் உடமைகளை இழந்து தவித்துவருகின்றனர்.
வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், நடிகர்கள் என அவர்களால் முடிந்த நிவாரண அளித்துவருகின்றனர்.
Hi Friends and Fans..! I have decided to contribute “1 crore to Kerala”.. pic.twitter.com/GQjQU1MfOD
— Raghava Lawrence (@offl_Lawrence) 23 August 2018
இந்நிலையில் பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரூ. 1 கோடியை கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதியாக அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவரது டுவிட்டர் பக்கத்தில் ராகவா லாரன்ஸ் பதிவிட்டுள்ளார். வரும் சனிக்கிழமை கேரள முதல்வரை சந்தித்து நிதியை அளிக்க உள்ளதாக லாரன்ஸ் கூறியுள்ளார்.