அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
இறந்த மாரிமுத்து இயக்குனராக பணியாற்றிய புகைப்படங்கள்.! இணையத்தில் வைரல்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான துணை இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்தவர் மாரிமுத்து. தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் எதிர்நீச்சல் சீரியலின் மூலம் பிரபலமானவராக அறியப்பட்டு வந்தார்.
இவர் நடிகராக கண்ணும் கண்ணும், வாலி, யுத்தம் செய், வந்தான் வென்றான், உதயா, குற்றமே தண்டனை, கடைக்குட்டி சிங்கம், பரியேறும் பெருமாள், கொம்பன், சுல்தான் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருந்தார். படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.
இது போன்ற நிலையில், மாரிமுத்து சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து இவர் முதன் முதலில் இயக்கிய 'கண்ணும் கண்ணும்' திரைப்படத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சோகத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.