#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட.. எப்படி இருந்த நடிகர் பிரபு இப்படி மாறிட்டாரே! இதெல்லாம் எதற்காக? புகைப்படத்தைக் கண்டு ஷாக் ஆன ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் 80'ஸ்,90'ஸ்காலகட்டங்களில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் வாரிசு ஆவார். சினிமாத்துறையில் பப்ளிமாஸ் ஹீரோவாக வலம் வந்த அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.
மேலும் நடிகர் பிரபு தற்போதும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். பிரபு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக, பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரபு தற்போது உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார். பொன்னியின் செல்வன் படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்ததாக கூறப்படுகிறது.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், அதனை கண்ட ரசிகர்கள் பிரபு சின்னத்தம்பி படத்தில் இருந்தது போல் உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் குஷ்புவும் உடல் எடையை குறைத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இருவரும் மீண்டும் சின்னதம்பி 2வில் நடிக்க உள்ளீர்களா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.