தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மறைந்த நடிகர் ரகுவரன் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவங்கள்.!
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் மிக சிறந்த வில்லன் நடிகர்கள் என்ற பட்டியலை எடுத்துக் கொண்டால், அதில் நிச்சயமாக ரகுவரன் இருப்பார். முதல்வன், பாட்ஷா உள்ளிட்ட திரைப்படங்கள் தான் அதற்கு சிறந்த உதாரணம்.
அதேபோன்று ரகுவரன் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், தமிழ் சினிமாவை ஒரு காலத்தில் கட்டி ஆண்ட நடிகர்களில் ஒருவராக ரகுவரன் இருக்கிறார். அவருடைய வாழ்க்கை வரலாறு தொடர்பாக தான் தற்போது நாம் பார்க்கவிருக்கின்றோம்.
நடிகர் ரகுவரன் கடந்த 1958ஆம் வருடம் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி கேரள மாநிலம் கொல்லங்கோடு என்ற பகுதியில் வேலாயுதம் நாயர், கஸ்தூரி தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். இதன் பிறகு ரகுவரனின் தந்தை தொழில் நிமித்தம் காரணமாக, தமிழகத்திற்கு குடி பெயர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து தன்னுடைய சிறுவயதில் கோயமுத்தூரில் வசித்து வந்த ரகுவரன், அங்கேயே தன்னுடைய பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்து அதன் பிறகு, கடந்த 1982 ஆம் வருடம் வெளியான 7வது மனிதன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அதன் பிறகு குற்றவாளி, கூட்டுப் புழுக்கள், மைக்கேல்ராஜ்_ கைநாட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கதாநாயகனாக நடித்த படங்களில் பெரிய அளவில் ஜொலிக்காத நிலையில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய பின்னர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
மேலும் ரகுவரன் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என்று பல்வேறு மொழிகளிலும் நடித்திருக்கிறார். இவர் வில்லன், கதாநாயகன் உள்ளிட்ட கதாபாத்திரத்தை மட்டும் ஏற்று நடிக்காமல் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
கடந்த 1996 ஆம் வருடம் நடிகை ரோகினியை காதலித்து கரம் பிடித்தார். இந்த தம்பதிகளுக்கு ரிஷி என்ற மகன் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வந்த ரகுவரன், ஒரு கட்டத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக தொடங்கினார்.
இதன் காரணமாக அவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை ரோகினியும் அவரை விட்டு பிரிந்தார். மது பழக்கத்திற்கு அடிமையானதால், உடல் நலக்குறைவு உண்டாகி உடல் உறுப்புகள் மெல்ல, மெல்ல செயலிழந்து, கடந்த 2008 ஆம் வருடம் நடிகர் ரகுவரன் உயிரிழந்தார். இவருடைய மரணம் திரையுலகினருக்கு மிகப்பெரிய பேரதிர்ச்சியாக இருந்தது.