மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல தமிழ் நடிகருக்கு நடந்த திடீர் திருமணம்! வைரலாகும் அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்.
நடிகர் ஆர்.கே.சுரேஷூக்கும் மது என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளநிலையில் மணமக்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராக அவதாரம் எடுத்தவர் நடிகை ஆர். கே. சுரேஷ். இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் ஆர்.கே.சுரேஷ்.
அதனை தொடர்ந்து நம்ம வீட்டுப் பிள்ளை, பில்லா பாண்டி, ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர் தற்போது மீண்டும் இயக்குனர் பாலா இயக்கத்தில் விசித்திரன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சுரேஷுக்கு, மது என்ற பெண்ணிற்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
தனக்கு திருமணம் நடந்து முடிந்த விஷயம் குறித்து நடிகர் ஆர். கே. சுரேஷ் தனது டிவிட்டர் பக்கம் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். தற்போது ரசிகர்கள் முதல், சினிமா பிரபலங்கள் வரை புது ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.