படப்பிடிப்புத்தளத்தில் நடிகர் சமுத்திரக்கனியின் பிறந்தநாளை சிறப்பித்த இயக்குனர் ஷங்கர்; குவியும் பாராட்டுக்கள்.!

தமிழ் திரையுலகில் பல மறக்க முடியாத படைப்புக்களை கொடுத்து, முன்னணி நடிகராக இருந்து வருபவர் சமுத்திரக்கனி. இயக்கம், எழுத்து என்பதோடு இருந்துவிடாமல் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் இவர் நடித்து வருகிறார்.
தற்போது சங்கரின் இயக்கத்தில், ராம் சரண் உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இன்று நடிகர் சமுத்திரக்கனியின் பிறந்தநாள் ஆகும்.
இதனை முன்னிட்டு படக்குழு நடிகர் சமுத்திரக்கனியின் பிறந்தநாளை படப்பிடிப்பு தலத்தில் வைத்து கொண்டாடியது. இதுகுறித்த விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் சமுத்திரக்கனி, எந்நாளும் நினைவில் இருக்கும் நாள் என மகிழ்ந்துள்ளார்.
என்றும் நினைவில் இருக்கும்நாளாக ❤️❤️❤️ அண்ணன் இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கும் GAME CHANGER திரைப்பட குழுவினருக்கும் 🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/2XwDS5hCio
— P.samuthirakani (@thondankani) April 26, 2024