"கோழைகளே... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.." ஜிபியு விமர்சனம்.!! நடிகை திரிஷா பதிலடி.!!
நடிகர் சமுத்திரக்கனியின் மகளை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், வில்லன் என பன்முக திறமைகளை கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சமுத்திரக்கனி. இவர் முதலில் தொலைக்காட்சி தொடர்களை இயக்கி வந்த நிலையில் உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்தார்.
அதனை தொடர்ந்து நாடோடிகள் படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். மேலும் சமுத்திரக்கனி மக்களுக்கு செல்ல நினைக்கும் கருத்துக்களை தனது தரமான படத்தின் மூலம் தெரிவித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது சமுத்திரக்கனியின் மகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.