மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் சமுத்திரக்கனியின் மகனா இது... புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியான புகைப்படம்... குவியும் லைக்ஸ்கள்!!
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், குணசித்திர நடிகர் என பன்முக திறமைகளை கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சமுத்திரக்கனி. இவர் இயக்கத்தில் வெளியான நாடோடிகள், நிமிர்ந்து நில், வினோதய சித்தம் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது சமுத்திரக்கனி படங்கள் இயக்குவதை தவிர்த்து நடிப்பில் மட்டும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். தல அஜித்துடன் இணைந்து துணிவு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். தனுஷ்டன் வாத்தி படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று உலகம் எங்கும் புத்தாண்டு ஸ்பெஷலாக கொண்டாடப்பட்டது. புத்தாண்டுக்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் சமுத்திரக்கனி தனது மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அட சமுத்திரக்கனியின் மகனா இது அச்சு அசல் அவரை போலவே இருக்கரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.