திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குக் பண்ணி எங்க சாப்பிடுறாங்க? புக் பண்ணிதான் சாப்பிடுறாங்க.. தனது பாணியில் கலாய்த்த சந்தானம்.!
தமிழ் திரையுலகில் காமெடி சூப்பர்ஸ்டாராக வலம்வந்தவர் நடிகர் சந்தானம். தற்போது கதாநாயனாக நடிக்கத்தொடங்கியதில் இருந்து, காமெடி சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு சற்று விடுமுறை விட்டதாக தெரியவருகிறது.
அவரின் நடிப்பில் வெளியாகிய வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு உட்பட சில படங்களை தவிர்த்து, பிற படங்கள் பெரிய அளவிலான வெற்றியை அடையவில்லை. சபாபதி, ஏ1 குறிப்பிட்ட வெற்றியை தந்தது.
டிக்கிலோனா திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியில் அது ஓ.டி.டியில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சந்தானத்திடம், இன்றைய இளம் தலைமுறையின் உணவுப்பழக்கம் குறித்து கேட்கப்பட்டது.
அப்போது, "இன்றெல்லாம் வீட்டில் குக் செய்து சாப்பிடுபவர்களை விட, ஆன்லைனில் புக் செய்து சாப்பிடுவோர் அதிகமாகிவிட்டனர். 90% நபர்கள் உணவை லைக் செய்து சாப்பிடாமல், இன்ஸ்டாவில் லைக் வாங்க சாப்பிடுகின்ற்னர்" என தனது பாணியில் கலாய்க்கும் வகையில் கூறினார்.