"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
பழைய பாணியில் காமெடியில் கலக்கவரும் சந்தானம்; பில்டப் படத்தின் டீசர் இதோ..! வயிறு குலுங்க என்ஜாய்மென்ட் உறுதி.!
தமிழில் காமெடி சூப்பர் ஸ்டாராக வலம்வந்து, தற்போது கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் சந்தானம். இவரின் நடிப்பில் வெளியாகிய வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு, ஏ1, சபாபதி, டிக்கிலோனா உட்பட பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், கல்யாண் இயக்கத்தில், நடிகர் சந்தானம் பில்டப் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.
கடந்த 1980 ஆம் ஆண்டுகளில் நடந்த ரஜினி, கமல் ரசிகர்கள் சண்டை தொடர்பான காமெடி காட்சிகளுடன் இப்படம் தயாரான நிலையில், தற்போது படத்தின் டீசர் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதன் வாயிலாக பிதரமான வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் காட்சிகள் படத்தில் இடம்பற்றுள்ளது உறுதியாகியுள்ளது. படம் நவம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தில் ஆனந்தராஜ் பெண் வேடத்தில் நடித்துள்ள நிலையில், ராதிகா ப்ரீத்தி, கேஎஸ் ரவிக்குமார், மன்சூர் அலிகான், மனோபாலா, முனீஸ்காந்த், தங்கதுரை, மொட்டை இராஜேந்திரன், ஆடுகளம் நரேன், சுந்தர்ராஜன் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
தனது பாணியில் மீண்டும் திரையரங்கில் சிரிப்பு சத்தத்தை சந்தானம் இப்படத்தில் கேட்கவைப்பார் என பலரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.