மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: பழைய பாணியில் வச்சி செய்யப்போகும் சந்தானம்.. கிக் படத்தின் அசத்தல் ட்ரைலர் வெளியானது.. லிங்க் உள்ளே.!
நடிகர் சந்தானத்தின் கிக் திரைப்பட டிரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் காமெடியனாக நடித்து, காமெடி சூப்பர்ஸ்டாராக கவுண்டமணிக்கு பின்பு திகழ்ந்து வந்த நடிகர் சந்தானம், தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இன்று வரை அவரின் காமெடிக்கு கிடைத்த வரவேற்பு வேறு யாருக்கும் கிடைக்கவில்லை.
இன்றளவில் காமெடிக்கு என பல நடிகர்கள் வந்துவிட்டாலும், சந்தானம் உருவாக்கிய ஒரு இடத்தை யாராலும் பூர்த்தி செய்ய முடியவில்லை. பிற திரைப்படங்களில் காமெடி இருந்தாலும், வயிறு குலுங்க சந்தானத்தின் காமெடிக்கு சிரித்த அளவு இல்லாமல், சரி பரவாயில்லை என்ற அளவிலேயே உள்ளது.
இந்நிலையில், நடிகர் சந்தானம் இயக்குனர் பிரசாந்த் ராஜின் இயக்கத்தில் கிக் என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் தான்யா ஹோப், ராகினி திவேதி, நடிகர் செந்தில், தம்பி ராமையா உட்பட பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தில் நடிகர் சந்தானத்தின் காமெடி ஏகபோகமாக ரசிக்கும் வகையில், ரசிகர்கள் நினைத்த படக்குழு தெரிவித்துள்ளதால் படம் அனைவராலும் எதிர்பார்க்கபடுகிறது.