திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகர் சந்தானமா இது... என்ன தெலுங்கு ஹீரோ மாறி இருக்காறே... குவியும் கமெண்ட்கள்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான "லொள்ளு சபா" என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சந்தானம். பின்னர் 2004ம் ஆண்டு "மன்மதன்" படத்தில் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சச்சின், சிவா மனசுல சக்தி, பொல்லாதவன், பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் வேற லெவல் காமெடியில் கலக்கியிருந்தார்.
இவ்வாறு நகைச்சுவை நடிகராக நடித்துக்கொண்டிருந்த சந்தானம் திடீரென 2008ஆம் ஆண்டு "அறை எண் 305ல் கடவுள்" என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தாலும், பெரும் பாலும் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் தான் அதிகம் நடித்து வருகிறார்.
சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 80ஸ் பில்டப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் 60 மற்றும் 70 களில் நடக்கும் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் சந்தானத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள் அட தெலுங்கு நடிகர் ரவிதேஜா என நினைத்துவிட்டோம் என கமெண்டில் பதிவிட்டு வருகிறார்கள்.