"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
வாரிசா? துணிவா?.. சந்தானத்திடம் கேள்வி கேட்டு சிக்கிக்கொண்ட பத்திரிகையாளர்.. நடந்த சுவாரசிய சம்பவம்.!
காமெடி சூப்பர்ஸ்டார் சந்தானத்தின் நடிப்பில், மனோஜ் பிதா இயக்கத்தில் நவ. 25ம் தேதி திரைக்கு வரவுள்ள திரைப்படம் ஏஜென்ட் கண்ணாயிரம். நேற்று இப்படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய நடிகர் சந்தானம், "விஜய்யின் வாரிசு திரைப்படம் ஆந்திர மாநிலங்களில் ரிலீஸ் ஆவது குறித்து தயாரிப்பாளர்கள் பேசி இறுதி முடிவு எடுப்பார்கள்.
வாரிசு படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் தெலுங்கு மொழியை சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். இதில் நாம் பேச ஒன்றும் இல்லை. ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. அனைவரும் வந்து பார்த்து ரசித்து செல்லும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் எப்போதும் சுதாரித்துக்கொண்டு தெளிவாகத்தான் தான் இருந்தார்கள்.
நல்ல படங்கள் மட்டுமே அன்றில் இருந்து இன்று வரை வெற்றியை கண்டுள்ளது. ஆகையால், நல்ல படங்கள் கொடுத்தால் மக்கள் கட்டாயம் வெற்றியை கொடுப்பார்கள். மக்கள் ஏற்கனவே பார்த்த படங்களையே மாவு போல அரைத்து கொடுத்தால், அவர்களும் மாவு கொடுத்துவிடுவார்கள். அவர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப கதைகளை தேடுகிறார்கள். அதை நாம் கொடுத்தால் வெற்றி கிடைக்கும். நம் மீது உள்ள விமர்சனத்தை ஏற்று தவறுகள் இருந்தால் திருத்திக்கொள்ள வேண்டும்" என்று பேசினார்.
பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், பத்திரிகையாளர் பொங்கல் அன்று வெளியாகும் வாரிசு திரைப்படம் பார்ப்பீர்களா? துணிவு படம் பார்ப்பீர்களா? என்று சந்தானத்தை நோக்கி கேள்வி எழுப்ப, சந்தானமோ சுதாரிப்புடன் செய்யப்பட்டு கேள்வியை கேட்டவரை அன்போடு அழைத்து அருகில் நிற்கவைத்து நீங்கள் எந்த படத்திற்கு போவீர்கள் என கேள்வியை திருப்பி கேட்டு புன்னகையுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.