திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சந்தானத்தின் 'வடக்குப்பட்டி ராமசாமி' படம் வெளியீடு தேதி அறிவிப்பு: டீசர் வீடியோ உள்ளே.!
நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ், மொட்டை இராஜேந்திரன், எம்.எஸ் பாஸ்கர், நிழல்கள் ரவி, ஜான் விஜய், ரவி மரியா, பகோடா பாண்டி உட்பட பலர் நடித்து தயாராகியுள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி (Vadakkupatti Ramasamy).
டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கி வழங்கிய கார்த்திக் யோகி, தற்போது மீண்டும் சந்தானத்துடன் கூட்டணி அமைத்து வடக்குப்பட்டி ராமசாமி படம் தயாராகியுள்ளது. சியன் ரோல்டன் இசையில், பீப்புள் மீடியா பேக்டரி தயாரிப்பில் படம் வெளியீடுக்கு தயாராகியுள்ளது.
இன்று படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி மாதம் 02ம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் ப்ரமோ வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது.