மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா! சித்தப்பு சரவணனா இது! கோட் சூட், கூலிங் கிளாஸ்னு கலக்குறாரே! வைரலாகும் வேறலெவல் புகைப்படம்!
1990களில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் சரவணன். வைதேகி வந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் சூரியன் சந்திரன், நல்லதே நடக்கும், பொண்டாட்டி ராஜ்யம், தாய் மனசு என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் சரவணன் தற்போது பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். மேலும் பருத்திவீரன் திரைப்படத்தில் சித்தப்பு செவ்வாழையாக அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டது. அதை தொடர்ந்து அவர் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது அனைவரிடமும் நன்கு சிரித்து பேசி ரசிகர்களை ரசிக்கவைத்த அவர் சில சர்ச்சைகளிலும் சிக்கினார்.
இந்நிலையில் மீண்டும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நடிகர் சரவணன் தற்போது கோட் சூட், கூலிங் கிளாஸ் என செம ஸ்டைலிஷாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நடிகர் சரவணனா இது என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.