இளம் மனைவி..! ஒரே குழந்தை..! நடிகர் சேதுராமின் மறைவுக்கு பின்னால் உள்ள சோகம்..! தவிக்கும் குடும்பம்.!
இளம் நடிகரும், மருத்துவருமான நடிகர் சேதுராம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிர் இழந்த சம்பவம் சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன், சேதுராம், நடிகை விஷாகா நடிப்பில் கடந்த 2013 ஆம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படம். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார் மருத்துவரான சேதுராம்.
முதல் படமே வெற்றிபெற்ற நிலையில், அடுத்தாக வாலிபராஜா என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அதன்பிறகு சரியான வாய்ப்புகள் அமையாததால் மீண்டும் தனது மருத்துவர் தொழிலுக்கே திரும்பிவிட்டார் நடிகர் சேதுராம்.
இந்நிலையில்தான், கடந்த 2016 ஆம் ஆண்டு உமா மகேஸ்வரி என்ற பெண்ணுடன் சேதுராமுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணம் முடிந்து முழுசா 4 ஆண்டுகள் கூட தாண்டவில்லை.
பல்வேறு கனவுகளுடன், ஆசைகளுடன் தொடங்கிய இவர்களது திருமண வாழ்வு சேதுராமின் திடீர் மாரடைப்பால் நிலைகுலைந்து போய்யுள்ளது. சேதுராமின் இந்த திடீர் மரணம் அவரது குடும்பத்தாரையும், சினிமா துறையினரையும் பெரும் சோகத்தில் தள்ளியுள்ளது என்றே கூறலாம்.