மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: அரங்கம் அதிர்ந்த தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பேச்சு..! முழு விபரம் உள்ளே.! என்ன சொன்னார் தெரியுமா?.!
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், மாணவர்கள் மற்றும் அவரின் பெற்றோர்களிடையே உரையாற்றினார்.
அப்போது விஜய் பேசுகையில், "நடந்து முடிந்த 10, 12 ம் வகுப்பு தேர்வில், சாதனை படைத்த எனது தம்பி, தங்கைக்கும், இன்று பெருமையுடன் வந்துள்ள பெற்றோர்களுக்கும், இந்த நிகழ்ச்சியை நடத்திய ஆனந்த் அவர்களுக்கும், தமிழக வெற்றிக்கழகத்தின் தோழர்களுக்கும், ஏனெனில் நீங்கள் தான் இரவு பகல் பார்க்காமல் ஏற்பாடுகளை செய்துள்ளீர்கள், என் நெஞ்சில் குடியிருக்கும் என் நண்பர்களுக்கும் பணிவான வணக்ககங்கள்.
இதையும் படிங்க: Good Bad Ugly: குட் பேட் அக்லீ படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியீடு.!
ஒர்கவுட் ஆன கெமிஸ்ட்ரி
மீண்டும் ஒருமுறை எதிர்கால தமிழகத்தின் இளம் மாணவ-மாணவிகளான உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. அதாவது, ஒரு பாசிட்டிவ் பவர் இருப்பவர்களை பார்க்கும்போது, ஆட்டோமேட்டிக் ஆ கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆகும். உங்களின் முகத்தை பார்த்ததில் இருந்து, காலையில் இருந்து அது ஓகே ஆகியுள்ளது. இந்த மாதிரி நிகழ்வில் நல்லதாக இரண்டு விஷயங்களை சொல்லலாம்.
நீங்கள் அடுத்தகட்டத்துக்கு செல்கிறீர்கள். உங்களில் சிலருக்கு வாழ்க்கையில் என்ன ஆக வேண்டும் என எண்ணம் இருக்கும். ஒருசிலர் தங்களின் வாழ்க்கையில் இருக்கும் எண்ணத்தில், எதிர்கால தேர்வில் சந்தேகம் இருக்கும். நீங்கள் தேர்வு செய்யும் அனைத்து துறைகளும் நல்லதுறை தான். உங்களுக்கு கிடைக்கும் துறையில் மிகப்பெரிய போராட்டத்தை எதிர்கொண்டு வெற்றியை அடையுங்கள். உங்களின் பெற்றோர், ஆசிரியரிடம் ஆலோசித்து முடிவை எடுங்கள். எத்துறைகிடைத்தாலும் அத்துறையில் திறமைசாலியாக இருங்கள்.
தலைவர்களாக மாறுங்கள்
இந்த சந்தர்ப்பத்தில் நான் உங்களுடன் சில தகவலை பகிர விரும்புகிறேன். நாம் ஒரு துறையான மருத்துவம், பொறியியல் உட்பட பல துறைகளை தேர்வு செய்வோம். தமிழ்நாட்டில் பல விதமான துறைகளில் சாதனையாளர்கள் இருக்கிறார்கள். நமக்கு நல்ல தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். நான் தலைவர்கள் என கூறியது அரசியல் ரீதியாக மட்டுமல்லாது. நீங்கள் சிறந்து விளங்கும் துறையில் தான். நீங்கள் மிகப்பெரிய தலைவராக வர இயலும். அவ்வாறான துறை தலைவராக நீங்கள் வேண்டும்.
எதிர்காலத்தில் அரசியல் ஒரு துறையாக வேண்டும். நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும், தலைவர்களாக வர வேண்டும். உங்களின் ஆர்வம் எனக்கு புரிகிறது. இப்போதைக்கு படியுங்கள், மீதி அப்போது பார்த்துக்கொள்வோம். நீங்கள் தினமும் செய்தித்தாளை படியுங்கள், அதனை படிக்கும்போது உங்களுக்கே புரியும். ஒரு செய்தியை ஒவ்வொரு நாளிதழும் வேறுபட்ட கோணங்களில் கொடுக்கும்.
உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்
இங்கு செய்தி வேற, கருத்து வேற என்பது உங்களுக்கு தெரியவரும். இன்றளவில் மெயின்ஸ்ட்ரீம் மீடியாவுக்கு இணையாக பிற சேனல்கள் வந்துவிட்டன. இவை நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் கூறுகிறார்கள். நீங்கள் அனைத்தையும் தெரிந்துகொண்டு உண்மையை புரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் உங்களுக்கு நல்லது கெட்டது தெரியவரும்.
அதனை தெரிந்துகொண்டாலே ஒருசில அரசியல் கட்சிகள் செய்யும் பொய்யான பிரச்சாரத்தை புரிந்துகொள்ள முடியும். அது தெரிந்துகொண்டால் மட்டுமே நாட்டிற்கு நல்லது செய்ய முடியும். மக்களுக்கு தேவையானது உங்களுக்கு தெரியும். ஒருகட்டத்திற்கு பின், பெற்றோருக்கு அடுத்தபடியாக, பெற்றோரை விட அதிகமாக நண்பர்களுடன் நேரத்தை செலவிடும் நேரம் கிடைக்கும். நல்ல நண்பர்களை தேர்வு செய்யுங்கள்.
போதைப்பொருள் விவகாரத்தால் நானும் அச்சப்படுகிறேன்
உங்களின் நட்பு வட்டாரத்தில் எதோ ஒரு விஷயம் இருக்கிறது என்றால், தவறான பழக்கத்திற்கு யாரேனும் அடிமையாக இருந்தால், அவரை திருத்துங்கள். உங்களின் அடையாளத்தை எப்போதும் இழந்துவிடாதீர்கள். நமது தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் அது அதிகரித்துவிட்டது. பெற்றோர், அரசியல் இயக்கத்தின் தலைவன் என்ற முறையில் அது எனக்கும் அச்சமாக உள்ளது.
ஆளும் அரசு அதனை செய்ய தவறவிட்டது என்பதை பேச நான் இங்கு வரவில்லை. ஒரு அரசை விட நாம் தான் நம்மை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். போதைப்பொருளை நாம் ஒழிக்க வேண்டும், அதனை எடுத்துக்கொள்ள கூடாது. தேர்வில் தேர்ச்சியடைய முடியாதவர்கள் வருத்தப்பட வேண்டாம். தோல்வி முடிவு இல்லை. ஆலோசனை கூறினால் உங்களை போல எனக்கும் பிடிக்காது. நல்லதை தேர்வு செய்து பயணியுங்கள்" என பேசினார்.
இதையும் படிங்க: "காந்திவழியில நீங்க, நேதாஜி வழியில நான்" - அனல் பறக்கும் வசனத்துடன், ஆக்சன் காட்சிகள்.. இந்தியன் 2 ட்ரைலர் இதோ.!