அட.. நடிகை அதுல்யா ரவியா இது! அடையாளமே தெரியாம வேற மாதிரி இருக்காரே! வைரலாகும் புகைப்படங்கள்!!



actress-adulya-ravi-photoshoot-viral

தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் கண்கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் அறிமுகமானவர் அதுல்யா ரவி. கோவையை சேர்ந்த இவருக்கு இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் அவருக்கு ஏராளமான படவாய்ப்புகளும் வரத்துவங்கியது. 

இந்த நிலையில் அதுல்யா அடுத்தடுத்தாக கதாநாயகன், நாடோடிகள் 2, நாகேஷ் திரையரங்கம், கீ, அடுத்த சாட்டை, ஏமாளி, கேப்மாரி,முருங்கைகாய் சிப்ஸ் போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் குடும்ப பாங்காக, ஹோம்லியாக நடித்துவந்த அதுல்யா ரவி தற்போது கவர்ச்சிக்கு தாவியுள்ளார்.

இந்நிலையில் சில படங்களை கைவசம் கொண்டிருக்கும் அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அதுல்யா ரவி ஆள் அடையாளமே தெரியாமல் காணப்படுகிறார். மேலும் அவரது புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அதுல்யா ரவி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா? எனவும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.