மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகர் அமலா பால்; ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.!
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை அமலா பால் சிந்துசமவெளி, மைனா, வேலையில்லா பட்டதாரி, தெய்வத்திருமகள், ராட்சசன், பசங்க 2, தலைவா, ஆடை, நிமிர்ந்து நில் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜயை திருமணம் செய்துகொண்ட நிலையில், 2017ல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து, சில திரைப்படங்களில் நடித்த நடிகை, தனது நண்பர் ஜெகத் தேசாயுடன் ஊர்சுற்றி வந்தார்.
ஒருகட்டத்தில் இருவருக்கும் பிடித்துப்போக, ஜெகத்தும் தனது தோழிக்கு காதல் அன்பை வெளிப்படுத்தி செய்திருந்தார். அதனை அமலாபாலும் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், நடிகை அமலா பால் தான் (Amala Paul Pregnant) கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருக்கிறார். தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கிய நிலையில், இது அவர்களுக்கிடையேயான உறவின் ஆழத்தை உணர்த்தி இருக்கிறது.