#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரொம்ப கஷ்டம்.. ஆபாசமாக பேசுவாங்க; தனியாக வர சொல்லி அழைப்பாங்க.! பிரபல நடிகை பகிர்ந்த மோசமான அனுபவங்கள்!!
90ஸ் காலகட்டங்களில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்து, விருதுகளைப் பெற்று பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஆமனி. 1990 ஆம் ஆண்டு வெளிவந்த புதிய காற்று என்ற படத்தின் மூலம் தனது திரைபயணத்தை தொடங்கிய அவர் தமிழில் தங்கமான தங்கச்சி, இதுதாண்டா சட்டம், முதல் சீதனம், புதையல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் ஹானஸ்ட்ராஜ் படத்தில் விஜய்காந்தின் மனைவியாக நடித்திருந்தார். நடிகை ஆமனி வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போதும் அவர் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஆமனி அண்மையில் பேட்டி ஒன்றில் சினிமாவில் துவக்ககாலத்தில் தனக்கு ஏற்பட்ட பல மோசமான நிகழ்வுகள் குறித்து பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, நான் சினிமாவில் அறிமுகமாகிய போது பல கஷ்டங்களை சந்தித்தேன். சிலர் என்னிடம் ஆபாசமாக பேசிவிட்டு, பின் காமெடியாக பேசியது போல காட்டிக் கொள்வார்கள். சினிமாவில் வாய்ப்பு வேண்டுமென்றால் தங்களுக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என கூறுவர்.
தாங்கள் அழைக்கும் இடத்திற்கு தனியாக வரவேண்டும் என சொல்வார்கள். ரொம்ப கஷ்டமாக இருக்கும். எனது அம்மாதான் திறமை இருந்தால் போதும் எந்த தவறும் செய்யாமல் சினிமாவில் சாதிக்கலாம் என்று எனக்கு தைரியம் கொடுத்தார் என கூறியுள்ளார்.